கரூர் மாவட்டம்

* கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று.

* சங்ககால சேர, சோழர்கள் தலைநகரம். அமராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் கரூரில் வாணிப சிறப்பை பறைசாற்றுபவை.

* ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

* கரூர் சட்டப்பேரவைத் தொகுதி 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

* வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற நகரம்.

* விவசாய உற்பத்தி: வாழை, நெல், கரும்பு, கோரை சாகுபடி செய்யப்படுகிறது.

* முக்கிய தொழில்கள்: ஜவுளி ஏற்றுமதி, நிதி நிறுவனங்கள், பேருந்து கூண்டு கட்டுதல், சாயமேற்றுதல் மற்றும் கொசுவலை உற்பத்தி.

   உபயோகமான தகவல்கள்:

*  வானிலை (Weather)  Courtesy: AccuWeather